covid-19

TN Corona News:தமிழகத்தில் ஆயிரத்தை தொடவிருக்கும் கொரோனா பாதிப்பு …!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கையானது திரும்பவும் தற்போது வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 800க்கும் மேல் இருந்த நிலையில் இன்று 900-தினை தாண்டியுள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 945 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்நிலையில் பிரதமர் மோடி அவர்களும் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 6 மாநில அமைச்சருடனான பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் சுகாதாரத்துறை கூறும்பொழுது தேர்தல் நெருங்கும் சமயத்தில் பரப்புரைகள் எல்லா ஊர்களிலும் நடைபெற்று வருகின்றது.

தேர்தல் கூட்டத்தில் பங்கேற்கும் மக்கள் முக கவசம் அணியாமல் இருப்பதே தொற்றிற்கு காரணம் என்று கூறியுள்ளார்.மேலும் நோய் குறித்த பயம் மக்களிடையே குறைந்து விட்டதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது.இவற்றை மனதில் கொண்டு அனைத்து மக்களும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: