entertainment news-in-tamil

Tamil Entertainment: தமிழ்நாட்டு மருமகனானார் பும்ரா …

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மணந்து தமிழகத்தின் மருமகனானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்குப் பிறகு தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியில் இருந்து விடுப்பு எடுத்தார்.

மார்ச் முதல் தொடங்கவிருக்கும் டி20 தொடருக்கும் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. பும்ரா திடீரென கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தது குறித்து சில தகவல்கள் சுற்றி வருகின்றன.அதில் அவர் திருமணமும் அடங்கும்.

குறிப்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சஞ்சனா கணேசனை என்பவரை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்ற செய்தி தீபோல பரவியது.

இன்று அது உண்மையாகியுள்ளது.ஜஸ்ப்ரீத் பும்ரா – சஞ்சனா கணேசன் ஜோடியின் திருமணம் இன்று கோவாவில் நடந்துமுடிந்துள்ளது. பிங்க் நிற உடையில் மணமகன் – மணமகள் இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

%d bloggers like this: