மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று கோரானா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
இந்தியா முழுவதும் முதல் கட்டமாக தடுப்பூசி போடும் பணியானது கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கான இரண்டாம் கட்ட வழிமுறைகளை மத்திய அரசு மார்ச்- 1 ஆம் தேதி முதல் வெளியிட்டது.
அதன்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது.
மேலும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மக்களின் விருப்பத்தின் பெயரில் கட்டணம் செலுத்தி போட்டு கொள்ளலாம் எனவும் அறிவித்து இருந்தது.
இதன்படி நாட்டின் பிரதம அமைச்சர் நரேந்திர மோடி உட்பட பிரபலங்கள் ஒவ்வொருவரும் தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.இதன் வரிசையில் பிரபல நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான நடிகர் கமலஹாசன் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த வீடியோ பதிவில் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் தன்மேல் மட்டுமல்லாமல் பிறர் மேல் அக்கறை உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் நோய் தடுப்பூசியை உடனடியாக எடுத்துக் கொள்ளுங்கள் ஊழல் தடுப்பூசிக்கு அடுத்த மாதம் தயாராகுங்கள் என தனக்கே உரிய பாணியில் பூடகமாக அரசியல் கருத்தினை தெரிவித்துள்ளார்.