rasi-palangal

Rasi Palan: இன்றைய ராசி பலன் 06-03-2021

மார்ச் – 6 ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம்.வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.செலவை கட்டுப்படுத்த வேண்டும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.யாரிடமும் கடன் வாங்க வேண்டாம் .எந்த செயலையும் கவனமாக செய்தால் வெற்றி நிச்சயம்.இறைவழிபாடு நன்மை சேர்க்கும்.

ரிஷபம்

தனவரவு தாராளமாக இருக்கும்.நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாகக் கிடைக்கும்.தொழில் மற்றும் வியாபாரம் நன்றாக இருக்கும்.வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

மிதுனம்

உங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் உதவி செய்வார்கள்.எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். எதிர்பாராத உத்தியோக மாற்றங்கள் உண்டாகும். வாகனம் மற்றும் வீட்டில் பராமரிப்பில் ஈடுபடுவீர்கள்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.தற்பொழுது இருந்த வேலையை காட்டிலும் உத்தியோக உயர்வு பெறுவீர்கள்.

கடகம்

எண்ணத்தில் தெளிவு ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.வெளியூர் பயணம் செய்ய நேரிடும்.அலுவலகத்தில் தரப்படும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.உங்கள் காரியங்களில் கண்ணாக இருப்பீர்கள்.ஆரோக்கியம் மேன்மை பெறும்.

சிம்மம்

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.கலையில் ஆர்வம் அதிகரிக்கும்.புது வகையான பொருட்களை வீட்டிற்கு வாங்குவீர்கள். புது நபர்களின் அறிமுகத்தால் வியாபாரத்தில் புது அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலம் கிட்டும்.

கன்னி

மலை போல பிரச்சினை வந்தாலும் பனிபோல விலகிவிடும். கணவன் மற்றும் மனைவி இடையே சுமூகமான உறவு ஏற்படும்.முயற்சி திருவினையாக்கும் என்பது போல வியாபாரத்தில் எடுத்த காரியம் ஈடேறும். வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் நிலையும் மன நிலையும் சிறப்பாக இருக்கும்.

துலாம்

மேலதிகாரியுடன் பொறுமையாக செயல்பட வேண்டிய நாள் இது. வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.உணர்ச்சிவசப்படாமல் அனைவரிடமும் பேசுவது நல்லது.தொழிலில் முதலீடு செய்பவர் செய்வதற்கு முன்னால் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் சகோதரர் வழியில் நன்மைகள் கிட்டும்.

தனுசு

நீண்ட நாள்களாக விரும்பிய விஷயங்களை இந்த நாளில் நீங்கள் செய்து முடிப்பீர்கள்.எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதை சிறப்பாகவும்,ஆர்வமாகவும் செய்து முடிக்கும் காரணத்தினால் நற்பெயர் வந்து சேரும்.குருவின் பரிபூரண ஆசீர்வாதத்தால் பொருள் சேர்க்கை உண்டாகும்.மனதிற்கு விரும்பிய பொருளை வாங்குவீர்கள்.குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.

மகரம்

அலுவலகத்தில் உங்களுக்கு பொறுப்புகள் குறையும்.பணியாளர்கள் உத்தியோகத்தில் ஒத்துழைப்பார்கள்.ஒரு சிலருக்கு விடுப்பும்,ஓய்வும் கிட்டும்.மனநிம்மதி கிடைக்கும் நாளிது.காலச்சூழல்நிலை அறிந்து நீங்கள் செலவுகளை செய்வது நல்லது.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

கும்பம்

திட்டமிட்ட அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.வெளியிடங்களில் பயணிக்கும்போது புது நபர்களின் அறிமுகத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிட்டும். பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.எதிர்பாராத செலவுகள் மூலமாக சேமிப்புகள் கரையும் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.

மீனம்

வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்பட வாய்ப்புண்டு.வருமானம் பெருகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும்.உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் கூட தானாக உங்களுடன் வந்து சேருவார்கள். உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும்.சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.உடல் ஆரோக்கியம் சீராக காணப்படும்.

Leave a Reply

%d bloggers like this: