tamilnadu-election

TN Election News:தமிழக சட்டசபை தேர்தல் ஒத்தி வைக்க வாய்ப்பில்லை …தேர்தல் அதிகாரி விளக்கம்!

தமிழகத்தில் திட்டமிட்டபடியே தேர்தல் நடக்கும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் கொரோனா தொற்றும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.கொரோனா தொற்று அதிகம் உள்ள ஆறு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அதனால் சட்டசபை தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு தேர்தல் ஆணையம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.கொரோனா காலத்தில் பீகாரில் தேர்தல் பாதுகாப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.

எனவே, பீகாரில் இருந்து இரண்டு சுகாதார அதிகாரிகளை தமிழக தேர்தல் அதிகாரிகள் கேட்டு பெற்றுள்ளனர். தேர்தல் அதிகாரிகளான சுதிர்குமார்,ரோகிணி ஆகியோர் தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் வாக்குச்சாவடி மையங்கள்,வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகியவற்றை தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளோடு சேர்ந்து பார்வையிட்டனர்.

அதன் பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை தேர்தலை எப்படி பாதுகாப்பாக நடத்துவது என்று குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அங்கு தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஒத்தி வைக்க வாய்ப்பில்லை என்றும் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: