வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாயிகளின் ஓட்டு ஒன்று கூட திமுகவிற்க்கு கிடைக்காது என முதலமைச்சர் பழனிசாமி திருவாரூரில் பிரச்சாரத்தின்போது கூறியுள்ளார்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர் ஏ ஆர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து இன்று பரப்புரை நிகழ்த்தினார். அப்பொழுது முக ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் திமுக கட்சி தான் அனுமதி அளித்தது என்று கூறினார்.
விவசாயிகளின் கஷ்டத்தினை உணராமல் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து தனியார் வசம் ஒப்படைக்க திமுக முற்பட்டார்கள் என கூறினார்.என் மூலம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சட்ட ஆலோசனை நடத்தி விவசாய நிலமானது பாதுகாக்கப்பட்டது எனக் கூறினார்.
விவசாயிகளை பற்றி திமுகவிற்கு துளிகூட கவலை இல்லை எனவே விவசாயிகளின் ஓட்டு திமுகவுக்கு கிடைக்காது எனக் கூறினார்.2010ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி நீட் தேர்வை கொண்டு வந்தது எனவும் ஜெயலலிதா தான் நீட் தேர்வை தடுக்க கடுமையான முயற்சி செய்தார் எனவும் கூறினார்.
நீட் தேர்வு கூடாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும், நீதிமன்ற உத்தரவின் பெயரிலேயே நீர் தேர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.அதிமுகவை பொறுத்தவரை சிறப்பான ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகின்றது என்றும் பல்வேறு துறைகளில் தமிழக அரசு சிறந்த ஆளுமைக்கான விருதுகளை வாங்கியுள்ளது எனவும் கூறினார்.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது எனவும்,கோதாவரி-காவிரி இணைப்பு வரும் ஆட்சியில் நடந்து தீரும் எனவும் கூறியுள்ளார்.எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.