தமிழக சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்து தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (21-ம் தேதி) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கின்றார்.மாலை 5 மணிக்கு ஊத்தங்கரையில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் பழனிச்சாமி இரவு 8 மணிக்கு கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கின்றார்.
9 மணிக்கு ஓசூரில் பிரச்சாரம் முடிந்து இரவு அங்கேயே தங்கி மறுநாள் தர்மபுரி மாவட்டத்திற்கு புறப்படுகின்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி சேலம் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்து முதல்வர் பிரசாரம் செய்ய உள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிகளை போலீசார் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி-க்கள் அன்பு, ராஜி, டிஏஸ்பிக்கள் கிருஷ்ணகிரி சரவணன், பர்கூர் தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தனிபிரிவு அன்புமணி, டவுன் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.